பரீட்சை அறிவுறுத்தல்கள்:
இந்த வினாத்தாள் வீட்டிலிருந்தவாறு நிகழ்நிலை முறையில் பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. (ஒரு சமூக சேவைத் திட்டமாக, எவ்வித இலாப நோக்கமுமற்ற முறையில் உங்களது தொலைத்தொடர்பு சாதனங்களுக்கு தகுந்தாற் போல் இவ்வினாப்பத்திரம் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது, இதனால் நாட்டின் அனைத்து மாணவர்களும் வீட்டில் இருந்தவாறு இப்பத்திரத்துக்கு விடையளித்து பயன்பெற முடியும்.)
         
        • பாடம்:  
        • மொழி:   சிங்களம்/தமிழ்/English
        • திகதி: 2022-08-13,14  
        • நேரம் மு.ப 9.00-10.00, மு.ப11.00-12.00, பி.ப 1.00-2.00, பி.ப 4.00-5.00 மற்றும் இரவு 7.00-8.00 (உங்களுக்கு வசதியான நேரத்தைத் தெரிவு செய்து  கொள்ளலாம்.)
        • காலம்:  ஒரு மணித்தியாலம் 
        • குறித்த நேரத்திற்கு 5 நிமிடங்களுக்கு முன் உமது மொழியைத் தெரிவுசெய்து  தரப்பட்ட  இணைப்பினூடாக (Link) உள்நுழைக.
        • பாடசாலையின் தொகைமதிப்பு எண்ணை  (Census number) அறிந்திருத்தல் வேண்டும். 
        பேனை/ பென்சில் மற்றும் தாளொன்றை  தயார்படுத்தி வைத்துக்கொள்ளவேண்டும்.
        • வினாப்பத்திரம் பல்தேர்வு வகையைக்கொண்ட 40 வினாக்களைக் கொண்டுள்ளது.
        • இவ் வினாப்பத்திரத்திற்கு நிகழ்நிலை (Online) மூலம் விடையளித்தல் வேண்டும். 
        • ஒவ்வொரு வினாவிலும் தரப்பட்டுள்ள 3 விடைகளுள் சரியான விடையைத் தெரிந்து அதனை கீழே தரப்பட்டுள்ள இடத்தில் குறித்தல்வேண்டும். 
        • நீங்கள் விடையளிப்பதற்கு முன், வினாப்பத்திரத்தின் மேலிருந்து கீழாகச் சென்று,  40 வினாக்களும் உங்களுக்குத் தோன்றுகின்றனவா என்பதையம் "SUBMIT" பொத்தான் காண்பிக்கப்படுகின்றதா என்பதனையும்  உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதன் பின்னர் மட்டுமே விடையளிக்க தொடங்குங்கள். அவை காண்பிக்கப்படாவிட்டால், உங்கள் இணையத் தொடர்பில் ஏதாவது சிக்கல்கள் காணப்படலாம். மீண்டும் எல்லாவற்றையும் அகற்றிவிட்டு ஆரம்பத்திலிருந்து முயற்சிக்கவும்.
        • குறித்த நேரத்திற்குள் எல்லா வினாக்களுக்கும் விடையளித்து இறுதியில் "Submit" பொத்தானை அழுத்தவேண்டும். குறித்தநேரத்தை கடந்து அனுப்பப்படும் விடைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
        • விடையளித்து முடிந்ததும் நீங்கள் பெற்றுக் கொண்ட புள்ளியை "View Score" எனும் பொத்தனை அழுத்தி பார்த்துக்கொள்ளலாம்.
        • யாதேனும் தடைகள், இடையூறுகள் ஏற்படின் கீழேயுள்ள  தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு உதவியைப் பெற்றுக் கொள்ளலாம்.
        
       
          • மேலும் இணைய வசதி இல்லாத மாணவர்களுக்கு, சபராகமுவ மாகாணத்தில் இந்த வினாத்தாளை முழுமையாக அச்சிட்டு வழக்கம்போல வீடுகளுக்கு விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
          • இவ் வினாப்பத்திரத்தின் விடைகள் மற்றும் எவ்வாறு வினாக்களுக்கு விடையளிப்பது என்பது பற்றிய கலந்துரையடல் காணொளி பின்னர் இந்த இணையதளத்தில் வெளியிடப்படும்.
          
          
        பாடம்தொடர்பான அழைப்பு:
        
        
         
        தொழில்நுட்ப  ஆலோசனை:
        
        திரு. M.U.M அஷ்கர்  - 071 489 4519 
        திருமதி. F. ரிசானா  - 077 079 7686