1. பின்வரும் துவித எண்களில் எது தசம எண் 35 இற்குச் சமவலுவானது
*2. பின்வரும் குறியீடுகளில் எது மின்னஞ்சல் முகவரியில் எப்போதும் உள்ளடக்கப்பட வேண்டும்?
*3. பின்வரும் வரிப்படத்தைக் கருதுக.
*4. பின்வரும் பிரயோகப் பொதிகளைக் கருதுக:
A தரவுத்தளப் பொதிகள்
B முன்வைப்புப் பொதிகள்
C விரிதாள் பொதிகள்
மேற்குறித்தவற்றில் எவை தரவுகளைத் தேக்கி வைத்து முறைவழியாக்கப் (process) பயன்படுத்தப்படலாம் ?
*5. பின்வருவனவற்றில் எது சீரான வள இடங்காணி (URL) இன் சரியான வடிவமாகும் ?
*6. பின்வரும் உருவில் ஒரு வகையான வலை மேலோடியின் (web browser) கருவிப் பட்டையின் (Toolbar) ஒரு பகுதி காணப்படுகின்றது.
*7. பின்வருவனவற்றில் எது நீண்டகாலத்திற்குக் கணினியுடன் பணியாற்றும்போது ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்கு விதந்துரைக்கப்பட்டுள்ளது ?
*8. ஒட்டியிராத (non-contiguous) கோப்புகளை ஓட்டியுள்ள (contiguous) கோப்புகளாக மாற்றுவதன் மூலம் ஒரு வன்வட்டின் ஆற்றுகையை உச்ச அளவாக்குவதற்குப் பயன்படுத்தப்படத்தக்க பணிசெயல் முறைமையில் உள்ள பயன்பாட்டுக் கருவி (utility tool) யாது?
*9. பின்வரும் வசதிகளில் சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளில் இருக்கும் வசதிகள் யாவை?
A எழுத்துச் சரிபார்ப்பியும் நிகண்டும் (Spell
Checker and Thesaurus)
B - பக்கத் திசையமைவு (Page Orientation)
C - அஞ்சல் ஒன்றிணைப்பு (Mail merge)
*10. பின்வரும் தசம எண்களில் எது துவித எண் 10001011 இற்குச் சமவலுவானது?
11. இரு வெற்றிடங்கள் உள்ள பின்வரும் கூற்றைக் கருதுக:
இணையம் என்பது ……….. ஆக இருக்கும் அதே வேளை வலை என்பது.....
ஆகும்.
மேற்குறித்த கூற்றில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்குப் பின்வருவனவற்றில் எவை ஒழுங்குமுறையில் அமைந்துள்ள மிகப் பொருத்தமான பதங்கள் ஆகும் ?
*12. பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A- முறுக்கிணை (Twisted pair) வடங்கள் தரவுகளை ஊடுகடத்தும் ஊடகமாகச் செம்பைப் பயன்படுத்துகின்றன.
B - ஒளியியல் நார் (Optical fibre) வடங்கள் தரவுகளை ஊடுகடத்துவதற்கு ஒளி அலைகளைப் பயன்படுத்துகின்றன.
C - ஒளியியல் நார் வடங்களிலும் பார்க்க முறுக்கிணை வடங்களின் தரவு ஊடுகடத்தல் கதி கூடியதாகும். மேற்குறித்த கூற்றுகளில் எவை சரியானவை ?
*13. பின்வரும் சேர்மானங்களில் எது இணையத்தின் சேவைகளை மாத்திரம் காட்டுகின்றது ?
*14. ஒரு வெற்றிடமுள்ள பின்வரும் கூற்றைக் கருதுக:
ஒரு தரவுத்தளத்தில் …………….. ஆனது தரவுத் தொகுதியைத் தேக்கி வைப்பதற்கு (store) நிரைகளையும் நிரல்களையும் பயன்படுத்துகின்றது.
மேற்குறித்த கூற்றிலுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்குப் பின்வருவனவற்றில் எது மிகப் பொருத்தமான பதமாகும் ?
**
15. பின்வருவனவற்றில் எது தரவுத்தள முகாமைத் தொகுதிகளுக்கு (DBMS) உதாரணங்களாகும் ?
*16. ஒரு வெற்றிடமுள்ள பின்வரும் கூற்றைக் கருதுக:
தரவுத்தளத்தில் உள்ள உள்ள ஒரு தனி உள்பொருளில் (single entity) தகவல்கள் ……………… என்பதில் அடங்குகின்றன.
மேற்குறித்த கூற்றிலுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்குப் பின்வருவனவற்றில் எது மிகப் பொருத்தமான பதமாகும்?
*17.மூன்று அவதானிப்புகளும் இயல்தகு காரணங்களும் பின்வரும் அட்டவணையில் முறையே நிரல் 1 இலும் 2 இலும் சரியான ஒழுங்கிலன்றித் தரப்பட்டுள்ளன.
*18. பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A - ஒரு தொலைக் கல்விச் சுற்றாடலில் மாணவர்கள் தமது வீட்டிலிருந்து எந்தவொரு நேரத்திலும் கற்றற் பொருள்களை அடையும் ஆற்றலைக் கொண்டிருக்கும் அதே வேளை பாரம்பரிய வகுப்பறைக் கற்றலில் பங்குபற்ற முடியாதபோது எளிதாக இப்பாடங்களில் பங்குபற்றலாம்.
B செல்லிட உத்திகள் போன்ற தற்காலத் தொழினுட்பவியலைப் பயன்படுத்தி விவசாயிகளுக்கு பயிரிடுவதற்கு கந்த பயிர்கள், பயிர்களின் தற்போதைய விலைகள் போன்ற தகவல்களை அரசாங்கம் வழங்கலாம்.
C - நெடுந்தூரப் புகையிரதங்கள், பேருந்துகள் போன்றவற்றின் பயணச் சீட்டுகளை முன்கூட்டியே பதிவுசெய்வதற்குத் தற்காலத் தொழினுட்பவியலின் மூலம் செல்லிட உத்திகளைப் பயன்படுத்தலாம்.
மேற்குறித்த கூற்றுகளில் எவை மின்சேவைகளுக்கு (e- சேவை) உதாரணங்களாகும் ?
**
19. பின்வரும் எவ்வழிகளில் ஒரு நச்சுநிரல் உமது கணினிக்கு ஊடுகடத்தப்படலாம் ?
A மின்னஞ்சலினால் அல்லது மின்னஞ்சலின் ஓர் இணைப்பினால்
B - இணையத்திலிருந்து விடயங்களைப் பதிவிறக்கஞ் செய்வதனால்
C பளிச்சீட்டு நினைவகக் (flash memory) கோல் போன்ற கழற்றத்தக்க தேக்ககச் சாதனங்களைப் பொதுவாகப் பயன்படுத்துவதன் மூலம்
*20. பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A MS-DOS என்பது கட்டளை நிரை இடைமுகத்தைப் (CLI) பயன்டுத்தும் பணிசெயல் முறைமையாகும்.
B இசுறு லினக்ஸ், ஹன்தான லினக்ஸ் என்பன இலங்கையர்களால் தேசிய மயமாக்கப்பட்ட இரு திறந்த பணிசெயல் முறைகளாகும்.
c - மைக்கிரோசொப்ற் வின்டோஸ் என்பது வரைவியல் பயனர் இடைமுகம் (GUI) இல்லாத பணிசெயல் முறைமையாகும்.
மேற்குறித்த கூற்றுகளில் சரியானவை
யாவை ?
*21.ஓர் ஆவணத்தில் உள்ள பந்திக் குறிகளையும் ஏனைய மறைந்துள்ள வடிவமைப்புக் குறியீடுகளையும் பார்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளில் பயன்படுத்தப்படும் கருவி யாது ?
*22. நீர் ஒரு சொல் முறைவழிப்படுத்தல் மென்பொருளைப் பயன்படுத்தி இப்போது ஓர் இரு பக்க ஆவணத்தைத் தட்டச்சிட்டுள்ளீரெனக் கருதுக. இச்சந்தர்ப்பத்தில் உமது அச்சுப்பொறியும் தயார் நிலையில் உள்ளதெனக் கொள்க. இவ்வாவணத்தை அச்சிடுவதற்கு மிகவும் உகந்த வழி யாது ?
*23. பானு நேற்றுத் தயாரித்த ஓர் ஆவணத்தைப் பதிப்பித்துக்கொண்டு இருக்கின்றார். இக்கோப்பினைச் (ஆவணம்) சரியாகச் சேமித்து (save) வைத்தல் தொடர்பாகக் கீழே தரப்பட்டுள்ள கூற்றுகளில் சரியானது யாது ?
*24. விரிதாள் (spreadsheet) மென்பொருள் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் சரியானவை யாவை விரிதாள்களில் தரவுகள் நிரைகளாகவும் நிரல்களாகவும் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஒரு நிரையினதும் ஒரு நிரலினதும் இடைவெட்டு ஒரு கலம் எனப்படும்.
A விரிதாள்களில் தரவுகள் நிரைகளாகவும் நிரல்களாகவும் காட்சிப்படுத்தப்படுகின்றன.
B ஒரு நிரையினதும் ஒரு நிரலினதும் இடைவெட்டு ஒரு கலம் எனப்படும்.
C ஒரு பணித்தாளின் ‘Home’அமைவின் கல முகவரி 1A ஆகும்.
*25. ஒரு பணித்தாளின் கலப் பெறுமானங்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளன.
A1 = 2 B1 = 3 C1 = 4 D1 = 5
=(AI+BI)/CI*DI என்ற சூத்திரம் கலம் B4இல் நுழைக்கப்பட்டுள்ளது. கலம் B4இல் காட்சிப்படுத்தப்படும் பெறுமானம் யாது ?
*26. முன்வைப்பு மென்பொருள் தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருதுக:
A ஒரு படவில்லைக் காட்சியில் (slide show) சாவி Pஐ அழுத்துவதன்மூலம் முந்திய படவில்லையைப் பார்க்கலாம்.
B 'CTRL + N' சாவிச் சேர்மானத்தைப் பயன்படுத்துவதன்மூலம் ஒரு புதிய படவில்லையைச் செருகலாம்.
C திரை மீது ஒன்றுக்கு மேற்பட்ட படவில்லைகளைப் பார்ப்பதற்குப் படவில்லைத் தெரிவுக் காட்சியைப் (Slide sorter view) பயன்படுத்தலாம்.
மேற்குறித்த கூற்றுகளில் சரியானவை யாவை ?
*27. ஒரு பாடசாலையின் அலுவலகத்தின் தினசரிப் பணிகளில் உதவுவதற்காக ஒரு கணினிப் பிரயோக உதவியாளரின் சேவைகளைப் பெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பின்வரும் எத்துறையில் பெறப்பட்டுள்ள அனுபவம் ஒரு விண்ணப்பதாரருக்கு உகந்த தகைமையாகும் ?
*28. ஒரு கணினியின் எக்கூறு (component) தரவு தொடர்பான செய்பணிகளைச் செய்கின்றது ?
*29. இணையத்திற்குப் பிரவேசிப்பதற்குப் பின்வருவனவற்றில் எது அத்தியாவசியமன்று ?
*30. பின்வரும் நிகழ்வைக் கருதுக
"ஒரு பொதுக் கணினி ஆய்கூடத்தில் உள்ள ஒரு கணினியில் ஒரு பயனர் X இனால் ஒரு கடவுச்சொல்லின் மூலம் பாதுகாத்துத் தேக்கி வைக்கப்பட்டுள்ள ஒரு கோப்பினுள்ளே வேறொரு பயனர் Y பிரவேசித்து மாற்றஞ் செய்துள்ளார்." மேற்குறித்த நிகழ்வுக்குப் பின்வரும் எது காரணமாக இருக்கலாம் ?
*31. 1101101, 101001, 10010 என்னும் துவித எண்களின் இறங்கு வரிசை
*32. 1960 களிலிருந்து கணினி வன்பொருள்களின் கிரயம் (cost ) கணிசமான அளவில் குறைந்திருக்கும் அதே வேளை மென்பொருள்களின் கிரயம் ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளமையை அபர்ணா அறிந்துள்ளார். அவர் இதற்குக் காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.
A தொழினுட்ப முன்னேற்றங்கள் வன்பொருளின் கிரயத்தைக் குறைக்கின்றன.
B மென்பொருளின் சிக்கற் தன்மையை அதிகரிக்கச் செய்தல் மென்பொருள் கிரயத்தை அதிகரிக்கச் செய்கின்றது.
மேற்குறித்த காரணங்கள் தொடர்பாகப் பின்வருவனவற்றுள் எதனை ஏற்றுக்கொள்ளலாம் ?
*33. பின்வருவனவற்றில் எது தரப்பட்டுள்ள பாய்ச்சற் கோட்டுப்படத்தின் தருக்கத்தை வகைகுறிக்கின்றது ?
*34. பின்வரும் கூற்றுகள் தரப்பட்டுள்ள வரிசையில் நிறைவேற்றப்படும்போது X, Y, Z ஆகியவற்றின் பெறுமானங்கள் யாவை?
*35. ஒரு சமூக ஊடக வலைத்தளத்தில் சந்தித்த ராஜன் என்ற நண்பனைச் சந்திப்பதற்குச் செல்வதாக அருணனிடம் கமல் கூறுகின்றார். ராஜனைச் சந்திப்பதற்கு முன்னர் பின்வரும் விடயங்களைச் செய்யுமாறு கமலிடம் அருண் கேட்கின்றார்.
A-சமூக ஊடக வலைத்தளத்தில் தரப்பட்டுள்ள ராஜனின் சொந்தத் தகவலைச் செவ்வைபார்க்க.
B- ஒரு சமூக ஊடக வலைத்தளத்தில் சந்தித்த ஒரு புதிய நண்பரைச் சந்திப்பதற்குச் செல்வதாகக் கமலின் பெற்றோருக்கு அறிவிக்க.
C - சந்திப்பதற்காகக் கமலின் வேறொரு நண்பனை வரவழைக்க.
கமலின் சொந்தப் பாதுகாப்புக்காக மேற்குறித்த கூற்றுகளில் எவை நியாயமாகப் பின்பற்றப்படத்தக்கவை ?
*36
*37. மேற்குறித்த செய்நிரல் கூறு நிறைவேற்றப்படும்போது
'Num', 'Count' ஆகியவற்றின் பெறுமானங்கள் யாவை ?
38. தரப்பட்டுள்ள செய்நிரல் கூறில் While தடம் எத்தனை தடவை நிறைவேற்றப்படுகின்றது ?
*39. ஒரு குறித்த குறிமுறையில் A தொடக்கம் Z வரையுள்ள நெடுங்கணக்கு வரியுருக்கள் அடுத்துவரும் துவித எண்களாகக் குறிமுறைப்படுத்தப்பட்டுள்ளன. A.ஆனது 1000000 எனக் குறிமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வரியுரு C இற்குச் சமவலுவான துவித எண் யாது ?
*40. ஒரு பணிசெயல் முறைமையில் பயனர் கணக்குகள் தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை ?
A. - ஒவ்வொருவரும் ஒரு பயனர் பெயருடனும் கடவுச்சொல்லுடனும் தனது பயனர் கணக்கிற்குப் பிரவேசிக்கலாம்.
B - பயனர் கணக்கு என்பது பிரவேசிக்கத்தக்க கோப்புகளையும் உறைகளையும் பற்றிக் குறிப்பிடுவதும் கணினியில் விருப்பத்திற்கேற்ப மாற்றப்படத்தக்க அமைப்புகள் (Setting) பற்றிக் குறிப்பிடுவதுமான தகவல் தொகுப்பாகும்.
C-பலருடன் ஒரு கணினியைப் பகிர்ந்து கொள்வதற்குப் பயனர் கணக்கு உம்மை அனுமதிப்பதில்லை.
*