2014
Sign in to Google to save your progress. Learn more
1. முதலாம் தலைமுறைக் கணினிகள் தொடர்பாக பின்வருவனவற்றுள் சரியான கூற்று/கூற்றுகள் எது/எவை ?

A- கணினியின் பௌதிக அளவு ஒப்பீட்டு அளவில் பெரியது.

B-சுற்றுகளுக்காக வெற்றிடக் குழாய்கள் (vacuum tubes) பயன்படுத்தப்பட்டன.

C-செய்நிரலுக்காக (programming) இயந்திரமொழி (machine language) பயன்படுத்தப்பட்டது. Question
*
1 point

2. பின்வருவனவற்றுள் கணினியின் மையமுறைவழி அலகின் (CPU) கூறுகள் எவை ? 

*
1 point

3. துணைத் தேக்ககத்திற்கு (secondary storage) உதாரணங்கள் பின்வருவனவற்றுள் எவை ? 

*
1 point

4. கீழே தரப்பட்ட தர்க்கச் சுற்றின் உள்ளீடுகள் அருகிலுள்ள உண்மை அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

*
1 point
Captionless Image

5. தசம (decimal) எண் 101 இன் துவிதச் சமவலு யாது ?

*
1 point

6. கணினியில் 01000010 என்னும் துவித எண் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வெண்ணின் தசமச் சமவலு யாது ?

*
1 point

7. இலக்கமுறைக் கமராவின் தேக்ககத்தின் (storage) கொள்ளளவு 16GB. இக்கமராவில் 1MB அளவுள்ள எத்தனை நிழற்படங்கள் (photos) அதிகூடியளவில் (அண்ணளவாக) சேமிக்கப்படலாம் ?

*
1 point
8. A,B என்னும் இரண்டு ஆளிகள் (switches) மூலம் கட்டுப்படுத்தப்படும் மின்குமிழை வகைகுறிக்கும் கீழே தரப்பட்ட சுற்றினைக் கருதுக
*
1 point
Captionless Image

9. பின்வருவனவற்றுள் தெரிவுசெய்த சொற்களிலுள்ள எழுத்துகளின் அளவை அதிகரிக்கச் சொல்முறை வழிப்படுத்தல் ஆவணத்தில் பயன்படுத்தும் படவுரு (icon) எது ?

*
1 point

10. சொல்முறை வழிப்படுத்தல் மென்பொருளில் கிடைக்கக்கூடிய வசதிகள் பின்வருவனவற்றுள் எது/எவை ? 

A - தேடுதலும் மாற்றீடு செய்தலும் (Find and Replace)

B - அஞ்சல் ஒன்றிணைப்பு (Mail Merge)

C - எழுத்துப் பிழைகளைச் செவ்வைப் பார்த்தலும் சொற் களஞ்சியமும் (Spell Check and Thesaurus) 

*
1 point

11. சொல்முறை வழிப்படுத்தல் ஆவணத்திலுள்ள y = ax

மேலுள்ள சமன்பாட்டில் உள்ளவாறு இலக்கம் பயன்படுத்தக்கூடிய அம்சம் எது ?

*
1 point

12. பின்வருவனவற்றுள் சரியான வடிவத்தில் சூத்திரங்களை உள்ளீடு செய்ய உதவும் வகையில் விரிதாள் மென்பொருளில் கிடைக்கக்கூடிய கருவி எது ?

*
1 point

13. வெவ்வேறு அழகியல் பாடங்களில் ஒரு வகுப்பிலுள்ள 50 மாணவர்கள் பெற்ற புள்ளிகளைக் கொண்ட விரிதாளின் பிரித்தெடுத்த பகுதி கீழே தரப்பட்டுள்ளது.

*
1 point
Captionless Image
14. விரிதாள் மென்பொருளைப் பாவித்து தயாரிக்கப்பட்ட கீழேயுள்ள வட்ட வரைபடம், 2012ஆம் ஆண்டு இலங்கையின் நெற்செய்கை உற்பத்தி (மெற்றிக் தொன்களின்) யைக் காட்டுகிறது
*
1 point

15. இலத்திரனியல் நிகழ்த்துகை மென்பொருள் (Presentation Software) தொடர்பான பின்வரும் கூற்றுகளைக் கருதுக

A - Ctrl + N சாவிகளை அழுத்தி புதிய நிகழ்த்துகையை உருவாக்கலாம்.

B - படவில்லை காட்சி (slideshow) இன் போது N எனும் சாவியை அழுத்துவதால் அடுத்த படவில்லை காட்சிப்படுத்தப்படும். மேற்கூறிய கூற்றுகள் தொடர்பாக உண்மையானவை கீழ்வருவனவற்றுள் எவை ? 

*
1 point

16. ஒரு பாடசாலையிலுள்ள மாணவர்களின் தரவுகளை சேமிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் தரவுத்தள அட்டவணை ஒன்றில் முதன்மைச் சாவியாகக் (primary key) கொள்ளக்கூடிய மிகப் பொருத்தமான புலம் (field) பின்வருவனவற்றுள் எது ? 

*
1 point

17. இவ்வட்டவணையிலுள்ள பதிவுகளின் (records) எண்ணிக்கை யாது ? 

*
1 point
18. இவ்வட்டவணையிலுள்ள புலங்களின் (fields) எண்ணிக்கை யாது ? 
*
1 point

19. 'Item_Num' இற்கு மிகப் பொருத்தமான தரவு வகை (data type) என்ன ?

*
1 point

20. பின்வரும் மென்பொருள்களைக் கருதுக

A - DOS

B-ஃபயர்பொக்ஸ் (Firefox)

C-மைக்ரோசொப்ட் வின்டோஸ் (Microsoft Windows)

D - லினக்ஸ் (Linux)

மேற்குறித்தவற்றுள் பணிசெயல் முறைமைகள் (Operating Systems) எவை ? 
*
1 point

21. கீழே தரப்பட்ட செயல்களைக் (functions) கருதுக:

A-ஆவணத்திலுள்ள சொற்களை எழுத்துப் பிழை சரிபார்த்தல்

B-முறைமையில் இயங்கும் செயன்முறைகளை (processes) முகாமை செய்தல்

C-பயனருக்கு இடைமுகத்தை வழங்குதல்

பணிசெயல் முறைமையின் செயல்கள் மேற்குறித்தவற்றுள் எவை ?

*
1 point

22. பயனர் ஒருவரின் கணினி வன்வட்டின் அடைவு மரம் (directory tree) கீழேயுள்ள உருவில் காட்டப்பட்டுள்ளது.

*
1 point
Captionless Image
23. கீழேயுள்ள சீரான வள இடங்காணியைக் (URL) கருதுக
*
1 point
Captionless Image

24. பின்வருவனவற்றுள் இணையத்தின் தேடல் இயந்திரம் (search engine) எது ?

*
1 point

25. பின்வரும் கூற்றுகளைக் கருதுக:

A -ஒவ்வொரு இணையத்தளமும் தமக்குரிய தனித்துவமான சீரான வள இடங்காணி (URI) ஐக் கொண்டிருக்கும்.

B -இலத்திரனியல் ஆவணத்திலுள்ள மீ இணைப்பு (hyperlink) என்பது அதே ஆவணத்திலுள்ள வேறோர் இடத்தையோ அல்லது முற்றாக புதிய ஆவணத்தையோ இணைக்கும் ஒரு மூலகமாகும்.

C  -மீஉரை பரிமாற்று நெறிமுறை (http) இணையத் தரவுகளைப் பரிமாற்றுவதற்கு பயன்படுத்தப்படும். மேற்கூறியவற்றுள் சரியானவை எவை ?

*
1 point

26.வெற்றிடங்களைக் கொண்ட பின்வரும் பந்தியைக் கருதுக

தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகளினால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறியுமாறு மொகமட்டிடம் கேட்கப்பட்டது. அவர் கணினியின் முன்பாக அமர்ந்து இணையத்தை அடைவதற்காக (A)ஐ ஆரம்பித்து அதனூடாக (B) ஐ செயற்படுத்தினார். பின்னர் (C) இல் "தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லிகளினால் ஏற்படும் பாதிப்புகள்" எனும் சொற்றொடரைத் (text) தட்டச்சிட்டார்.

மேலுள்ள A,B,C எனும் வெற்றிடங்களை நிரப்ப மிகப் பொருத்தமானவை முறையே பின்வருவனவற்றுள் எவை? 

*
1 point

27. பின்வரும் ஊடகங்களுள் அதிவிரைவான தொடர்பாடலை வழங்கக்கூடியது எது ?

*
1 point

28. இடத்துரி வலையமைப்பினுள்(LAN) நவீன மடிக்கணினிப்(laptop) பாவனையாளருக்கு அதை இயங்குநிலையில் அங்குமிங்கும் கொண்டுசெல்வதற்கு அதிகூடியளவு வசதியை வழங்கக்கூடிய ஊடகம் பின்வருவனவற்றுள் எது ?

*
1 point

29. மேசைமேல் கணினியை (Desktop Computer) இணையத்துடன் தொடுப்பதற்கு தேவையற்றது பின்வருவனவற்றுள் எது ? 

*
1 point

30. மடிக்கணினிகள் சிலவற்றை இடத்துரி வலையமைப்பில் (LAN) ஒன்றுடனொன்று தொடுப்பதற்குப் பயன்படுத்தப்படாதது பின்வருவனவற்றுள் எது ?

*
1 point

31. நிறுவனமொன்று சொல்முறை வழிபடுத்தல் மென்பொருள் (X) ஐ கடையொன்றிலிருந்து கொள்வனவு செய்தது. அதே நிறுவனம் தனது கணக்கு வைப்பு நடவடிக்கைகளுக்காக கணக்கு வைப்பு மென்பொருள் (Y) ஐ வடிவமைத்துத் தருமாறு மென்பொருள் வடிவமைப்புக் கம்பனியிடம் கேட்டது.

மேற்குறித்த நிகழ்வு தொடர்பாக உண்மையானது பின்வருவனவற்றுள் எது ?

*
1 point
32. பின்வரும் கூற்றுகளைக் கருதுக

A- வழுநீக்கல் (debugging) என்பது கணினி செய்நிரலில் தவறுகளைத் திருத்தும் ஒரு செயன்முறையாகும்.

B - செய்நிரல் மொழி விதிகளை மீறுவதால் தொடரியல் வழுக்கள் (syntax errors) ஏற்படும்.

மேற்குறித்த கூற்றுகள் தொடர்பாக உண்மையானது எது ?

*
1 point

33. செய்நிரல் மொழிகளில் IF கூற்று ………………. என்னும் கட்டுப்பாட்டு கட்டமைப்புக்கு ஓர் உதாரணமாகும். மேற்குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு மிகப் பொருத்தமானது பின்வருவனவற்றுள் எது ?

*
1 point

34. தகவல் தொடர்பாடல் தொழினுட்ப (ICT) முறைமையொன்றில் தவறான பயன்படுத்துகைக்கு உதாரணமாகக் கொள்ளமுடியாதது பின்வருவனவற்றுள் எது ?

*
1 point

35. ஸ்பாம் (spam) என்பது

*
1 point

36. மீள்வரும் தகைப்பிற்கு (RSI) உதாரணம் எது ?

*
1 point

37. ஒரு தனிநபர் தனது வீட்டுக் கணினியை வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாக்க நினைத்தார். பின்வருவனவற்றுள் இத்தேவைக்கு உதவியாக அமையாதது எது ?

*
1 point

38. உங்கள் வீட்டுக் கணினியில் வைரஸ் தொற்றின் விளைவொன்றாக இல்லாதிருப்பதற்கு மிகவும் சாத்தியமானது பின்வருவனவற்றுள் எது ?

*
1 point

39. உங்கள் கணினியை அங்கீகாரமற்ற தொலை அணுகலிலிருந்து (remote access) பாதுகாக்கப் பயன்படுத்தத்தக்க மிகப் பொருத்தமான கருவி எது ?

*
1 point

40. நீண்ட நேரம் கணினியைப் பாவிப்பதால் கண் பாதிக்கப்பட்டு (eyestrain) அது மங்கலான பார்வையையும் தலைவலியையும் ஏற்படுத்தும். கண் பாதிப்பைக் குறைப்பது பின்வருவனவற்றுள் எவை ?

A- கணினித் திரையின் ஒளிர்வினதும் வேறுபடும் தன்மையினதும் (brightness & contrast) அளவை உச்ச அளவிற்கு அமைத்தல்

B - கணினிப் பாவனையின்போது கிரமமான இடைவேளை எடுத்தல்

C - பொருத்தமான அளவு வெளிச்சத்தைப் பயன்படுத்தலும் கண்ணைக் கூசச் செய்யும் பிரகாசமான வெளிச்சத்தைத் தடுக்க யன்னல் திரைகளைப் பயன்படுத்தலும்

*
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy